தமிழகத்தில் தந்தை ஒருவர் தனது மனைவி மற்றும் மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, அதன் பின் தாமும் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மதன்குமார், வசந்தகுமார் மற்றும் கார்த்தி என்று மூன்று மகன்களும் உள்ளனர்.
முடிதிருத்தும் கடை ஊழியரான முருகனின் மகன் மதன்குமார், கடந்த 8 மாதங்களுக்கு முன் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
மூத்த மகன் என்பதால் அவர் மீது தம்பதியர் அதீத பாசம் வைத்திருந்ததாகவும் அவர் இறந்தது முதலே முருகனின் குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தங்களுடைய வருமானத்துக்கு மீறி செலவு செய்து மகனுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வந்த முருகன், இறுதியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மதன்குமாரை சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழக்க, மனமுடைந்து போன முருகன், மகன் மதன்குமாரின் புகைப்படத்தை தனது மொபைலின் முகப்பில் வைத்து பார்த்தவாறு அடிக்கடி அழுதபடி இருந்துள்ளார்.
முருகனின் இரண்டாது மகன் வசந்தகுமாரும் முடிதிருத்தும் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். திங்கட்கிழமை காலை 7 மணியளவில் வசந்தகுமார் வேலை செய்யும் கடை உரிமையாளருக்கு போன் செய்து, மகனை வீட்டுக்கு அனுப்புமாறு முருகன் கேட்டுள்ளார்.
வசந்தகுமார் வீட்டுக்கு வந்தபோது ஏற்கனவே கோகிலாவும் கார்த்தியும் இறந்து கிடந்துள்ளனர். தொடர்ந்து மகனுக்கு விஷம் கலந்த தேநீரைக் கொடுத்துவிட்டு, தாமும் அதனை அருந்தி முருகன் தற்கொலை கொண்டுள்ளார்.மகன் இறந்த சோகம், அவரது சிகிச்சைக்காக வாங்கிய பல லட்ச ரூபாய் கடன் உள்ளிட்டவற்றால் மன அழுத்தத்துக்கு உள்ளான முருகன் இந்த விபரீத செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.