பகிடிவதையை ஒழிக்க பல்கலைகத்திற்குள் ஒருமித்த கருத்து இல்லாமையே மிகப்பெரிய சிக்கலாக உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும், பல்கலைக்கழக அமைப்பிலிருந்து பகிடிவதையை ஒழிப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன் என்றார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடந்த நிகழ்வில் பேசிய அமைச்சர், பகிடிவதை ன்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு சாபமாக மாறியுள்ளது என்றார்.
பீரிஸ் 80-90% பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதையை ஏற்கவில்லை. இந்த பிரச்சினை சமூகம் மற்றும் பல்கலைக்கழக அமைப்பிலிருந்து வேரறுக்க வேண்டிய ஒரு வெறுக்கத்தக்க சோகம். பகிடிவதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது ஏன் கடினம்? தற்போதைய அரசாங்கம் பகிடிவதையை அழிக்க அர்ப்பணித்துள்ளதாக பீரிஸ் கூறினார்.
அதேவேளை, பகிடிவதையை ஒழிப்பதில் பல்கலைகழகங்களிற்குள் ஒருமித்த கருத்தில்லாமையே பிரச்சனையென்றார். பகிடிவதையின் சில பகுதிகளே பிரச்சனையானவை, ஏனைய விடயங்கள் அவசியமானவை என கருதும் பல பேராசிரியர்களை தான் கண்டிருக்கிறேன் என்றார்.