அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் அமைச்சர்களுக்கு உரிய ஆலோசனை வழிகாட்டல்களை ஜனாதிபதியும் பிரதமரும் வழங்க வேண்டுமென கோருகின்றேன்.
இணக்கப்பாட்டு அரசாங்கமொன்றில் அங்கம் வகித்தால் அனைவரும் ஒரே கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்.பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அரசாங்கத்தை விமர்சனம் செய்து வருகின்றார்.ஆளும் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டே அரசாங்கத்தை விமர்சனம் செய்வது பயனற்றது.
ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் ஒர் கொள்கையில் செயற்படும் போது அதனை சுதந்திரக் கட்சி விமர்சனம் செய்வது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்வது பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.