போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சுனா கல்ராணிக்கு கர்நாடகா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சட்டவிரோத போதைப் பொருள் சப்ளை விவகாரத்தில் நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகங்கள் வலுத்துள்ளன. எனவே, அவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கர்நாடகா நீதிமன்றத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்னும் நிபந்தனையுடன் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.