ஹொரவப்பொத்தான- வவுனியா பிரதான வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பகல் 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
ஹொரவப்பொத்தான பிரதேச செயலகத்தின் விவசாய உற்பத்தி ஆராய்ச்சி உதவியாளராக கடமையாற்றும், ரிட்டிகஹவெவ பகுதியை சேர்ந்த எம்.அனுலா குமாரி (56) என்பவரே உயிரிழந்துள்ளார்
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து பயணிகளை ஏற்ற தரித்து நின்ற போது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் அதனை முந்திச் செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மனைவி ஆகியோர் டிப்பர் சில்லில் சிக்கி, பேருந்து சில்லுக்குள் சிக்குண்டனர்.
இதில் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்து விட, கணவன் காயமடைந்து ஹொரவப்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.