ஈழ விடுதலை இயக்கங்களின் முன்னோடியும் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகருமான இரட்ணா இரட்ணசபாபதியின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (12) காலை 11:30மணியளவில் கிளிநொச்சி உதயநகர் மேற்கில் உள்ள ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பின் வன்னி மாவட்ட அரசியல் துறை செயலகத்தில் நினைவு கூரப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வநாயகம், அரசியல் துறை செயலாளர், உபதலைவர் முக்கிய உறுப்பினர்கள் கட்சியின் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு ஒளியேற்றி மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது.
தோழர் இரட்ணாவும் ஈழ விடுதலையும் மற்றும் 21ம் நூற்றாண்டில் தோழர் நேசன் சங்கர்ராஜி அவர்களின் தலைமையில் புதுயுகம் படைப்போம் சமூக விடுதலை பெறுவோம் எனும் தலைப்பிலும் சிறப்பு உரையினை அரசியல் துறை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஜோன்சன் லீமா ஆற்றியிருந்தார்.
தொடர்ந்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வநாயகம் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அஞ்சலி உரை ஆற்றினார்கள்.
தோழர் இரட்ணா இரட்ணசபாபதி அவர்களின் நினைவாக 20 வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கான உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.