அனைவருக்குமான, தவறு இல்லாத தடுப்பூசிப் பக்கவிளைவு ஆதரவுத் திட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்
ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசிக்கும் இந்த திட்டம் உள்ளது. மேலும் இந்த திட்டம் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் இணைந்து செய்யப்படும்.
இதுதொடர்பாக பிரதமர் கூறுகையில், ‘தடுப்பூசிகளிலிருந்து கடுமையான பக்க விளைவுகள் நம்பமுடியாத அளவிற்கு அரிதானவை என்றாலும், கனேடியர்களுக்கு அவ்வாறு நேர்ந்தால் அவர்களுக்கு ஆதரவு இருப்பதை இந்த திட்டம் உறுதி செய்யும்.
யாராவது தடுப்பூசி பெற்ற பிறகு ஏதேனும் தவறு நடந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கு நியாயமான அணுகலை வழங்கும். தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை’ என கூறினார்.
மக்கள் ஒரு மோசமான எதிர்வினையை அனுபவிப்பது என்பது மிகவும் அரிது. டிசம்பர் 9ஆம் திகதி நாட்டின் முதல் கொவிட்-19 தடுப்பூசிக்கு ஹெல்த் கனடா ஒப்புதல் அளித்தது.