உலகில் உள்ள நாடுகளின் கடன் தரப்படுத்தும் மூன்று நிறுவனங்களில் ஒன்றான ஸ்டேன்டர்ட் எண்டு புவர் நிறுவனம் இலங்கையை கடன் தரப்படுத்தலில் கீழ் மட்டத்திற்கு தரப்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையை B- அணியில் இருந்து CCC- அணிக்கு தரப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் இலங்கை அங்கோலா, ஆர்ஜன்டீனா மற்றும் பெலிஸ் நாடுகள் வரிசைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி மூடிஸ் நிறுவனம் இலங்கையை caa1 என்ற கீழ் வரிசைக்கு தரப்படுத்தியது. நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிச் ரேட்டிங் நிறுவனம் CCC என்ற கீழ் வரிசைக்கு தரப்படுத்தியது. இதனடிப்படையில் கடந்த நான்கு மாதங்களில் மூன்று நிறுவனங்கள் இலங்கையை கீழ் வரிசைக்கு தரப்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக இலங்கைக்கு வெளிநாட்டு கடன்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.