நேற்று 760 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 32,135 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்களில் 674 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 81 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேர், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணி 28,502 ஆக அதிகரித்தது.
தற்போது நாடு முழுவதும் 62 வைத்தியசாலைகளில் 8,681 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, 473 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 23,304 ஆக உயர்ந்தது.
485 பேர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் உள்ளனர்.