தமிழகத்தில், காதலனுக்காக தூங்கிக் கொண்டிருந்த கணவனை மனைவி துடி துடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகேயுள்ள சீங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனபால். கட்டிட தொழிலாளியான இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆன நிலையில், இவர்கள் இருவரும் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென சத்யா வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர், பதறியடித்துக் கொண்டு, உள்ளே சென்று பார்த்தால் தனபால் சடலமாக கிடப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, விரைந்து வந்த பொலிசார் தனபாலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சத்யா முன்னுக்கு பின்னாக கூற, பொலிசாருக்கு சத்யா மீது சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் அவரை பொலிசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மணிகண்டன் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் நண்பரை அடிக்கடி பார்க்க வருவார். இதன் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. எங்களின் நாட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியது.
தன்னுடைய கணவர் வேலைக்கு சென்ற பின்னர், அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், தன்னுடைய கணவரிடம் கூறியதால், அவர் தன்னிடம் வந்து சத்தம் போட்டார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் அவரை கொலை செய்துவது தான் சரியான் முடிவு என்று நினைத்து, சம்பவ தினத்தன்று, கணவன் தூங்கியதும், மணிகண்டனை போன் செய்து அழைத்து கணவனை தீர்த்து கட்டிவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.