லண்டனில் 15 வயது சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 25 இளைஞனை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் எப்படியும வாரத்திற்கு ஒரு கத்தி குத்து சம்பவம் நடந்துவிடுகிறது. இதில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் கத்திகுத்துக்கு இரையாகி கிடக்கின்றனர்.
அந்த வகையில் கிழக்கு லண்டனின் Newham பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு சற்று முன் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தான்.
தற்போது அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாகவும், உயிரிழந்த நபரின் பெயர் Kayjon Lublin என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவருடைய நண்பர்கள் சிலர் கூறுகையில், அவன் நல்ல பையன், அவனைப் பற்றி பலருக்கும் தெரியும், அவர் ஒரு சிறுவனாக இருந்தார்.
அவருடைய முழு வாழ்க்கையும் குடும்பத்தினர் முன்னால் இருந்தது. அவர் ஒரு நல்ல குழந்தை, மற்றும் அவரது அம்மாவை நேசித்தார், இருவரும் பாசத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இப்போது அவரின் தாய் முற்றிலும் மனம் உடைந்து காணப்படுகிறார்.
நான் பின்னர் சென்று அவரை நேரில் பார்ப்போம் என்று கூறியுள்ளனர்.
Kayjon Lublin உடன் பள்ளிக்கு செல்லும் மகனின் தாய் கூறுகையில், என் மகன் அவனுடன் நல்ல நண்பர்களாக இருந்தான், அவன் ஒரு அழகான பையன். அவன் மரண செய்தியை கேட்டு என் மகன் பேரதிர்ச்சியில் உள்ளான்.
இந்த வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர்கள் கத்திகளை கீழே போடுவார்கள் என்று நான் விரும்புகிறேன்.
இவர்கள் எங்களுக்கு மற்றொரு குடும்பம் போன்று, கிறிஸ்துமஸ்க்கிற்கு சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படி நடந்த சம்பவம் மோசமான ஒன்று என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சிறுவன் பலத்த காயத்துடன் இருந்துள்ளான். அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இது குறித்து பொலிசார் மேற்கொண்டு வரும் விசாரணையில், 25 வயது மதிக்கத்தக்க நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.