வீராட் கோலி-அனுஷ்கா சர்மா திருமண நிச்சயதார்த்தம் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1 ஆம் திகதி) நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் வீராட் கோலி. நட்சத்திர வீரரான அவரும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள்.
முதலில் காதலிப்பதை மறுத்து வந்தனர். ஆனால் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றியதால் காதலிப்பது உறுதியானது. அதன்பின் கோலி-அனுஷ்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் டுவிட்டரில் அனுஷ்கா சர்மாவை ரசிகர்கள் விமர்சித்ததை வீராட்கோலி கண்டித்து கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் காதல் புதுப்பித்தது. அதன் பிறகு வீராட் கோலி-அனுஷ்கா சர்மா காதல் நன்கு பலமானது. பல இடங்களில் ஒன்றாக சுற்றினார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை உத்தரகாண்டில் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் வீராட் கோலி-அனுஷ்கா சர்மா திருமண நிச்சயதார்த்தம் புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1 ஆம் திகதி) நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம் நரேந்தர் நகரில் உள்ள ஓட்டல் ஆனந்தாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது என்றும், இதில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், தொழில் அதிபர் அனில் அம்பானி ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.