அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் அந்தணியில் இணையவுள்ளதால், அந்தணி பலம் வாய்ந்த அணியாக உருவாகி வருகிறது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டி வரும் 17-ஆம் திகதி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மிட்சல் தன்னுடைய பவுன்சர் பந்து வீச்சு மூலம் எதிரணிகளை மிரட்டுவார்.
தனது குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தற்போது குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் அனைத்து பணிகளும் முடிந்து விட்டதால் மீண்டும் அவுஸ்திரேலியா அணியில் இணைய தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்கிறார்.
உடனடியாக தற்போது சிட்னி மைதானத்தில் விளையாடி வரும் அவுஸ்திரேலியா அணிக்காக களம் இறங்கப் போகிறார் மிட்செல் ஸ்டார்க்.