வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தொகுதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று இரண்டாவது நாளாக மதுரையில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளார்.
பரப்புரையின் இடையே பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியுள்ளார்.
அதில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டி என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும். வரும் 31-ம் திகதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள் என்றார்.
மேலும். கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலும் கூடாது என்பது மடமை என குறிப்பிட்ட அவர், ஊழலை மேல்மட்டத்தில் இருந்தே ஒழிக்க வேண்டும் என்றார் கமல் ஹாசன்.