கர்ப்ப காலம் பெண்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே நேரத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.
குறிப்பாக விமான பயணத்தின் போது, மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு கர்ப்பிணி பெண்கள் விமான பயணத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை இதோ,
முதலாவதாக நீங்கள் பயணம் செய்யலாமா? வேண்டாமா? என மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பயணத்தின் போது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெல்ட்டினை வயிற்றின் கீழ் புறத்தில் அணிந்துகொண்டு, சற்று தாழ்வாக அமந்துகொள்ள வேண்டும்.
விமானத்தில் ஈரப்பதமானது குறைந்த அளவில் இருப்பதால் உங்கள் உடல் வறட்சி அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே போதுமானவரை தண்ணீர் வகை உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
ஆசிட் வகை உணவுகளை விமான பயணத்தின்போதும், பயணம் செய்வதற்கு முன்னரும் சாப்பிடக்கூடாது. காபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கூடிய வரை பெரிய அளவிலான விமானத்தில் பயணம் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சிறிய ரக விமானங்களில் அறைகளில் காற்றோட்ட பிரச்சனைகள் இருக்கும்.
எனவே விமானம் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது உங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது என்பது கடினமான ஒன்று.
ஒரே இடத்தில் அப்படியே அமர்ந்திருக்காதீர்கள், ஏனெனில் உங்கள் கால்கள் வீக்கம் அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது.
எனவே சிறிது நேரம் எழுந்துநில்லுங்கள் அல்லது உங்கள் கணுக்கால் சுழற்றுங்கள், கால்விரல்கள் சற்று அசைத்துக்கொள்ளுங்கள்.
முக்கியமாக, பயணத்தின்போது அனைத்து மருத்துவ சான்றிதழ்கள், மருந்துகளை எடுத்துக்கொண்டு செல்வது நல்லது.