உலகில் அதிகளவிலான இலத்திரன்களுடன் கூடிய மின்னல்கள் அதிகமாக தாக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ஆய்வுகளின் படி வெனிசூலா நாட்டிலேயே உலகில் அதிகளவில் மின்னல் தாக்குதல்கள் ஏற்படுகின்றன.
இந்த நாட்டின் மரக்கைபே விலே என்ற பிரதேசத்தில் சுமார் ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பில் ஆண்டு தோறும் 232 மின்னல்கள் தாக்குகின்றன.
மேலும் உலகில் அதிகளவில் இடிகள் தாக்கும் நாடாக கொங்கோ நாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் கபாரே நகரில் ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பில் வருடத்தில் 202 இடிகள் தாக்குகின்றன.
இதேவேளை மின்னல் தாக்கும் நாடுகளில் கொங்கோ மூன்றாவது இடத்தில் உள்ளதுடன் அங்குள்ள கொம்பேனெ நகரில் வருடத்தில் 176 முறை மின்னல்கள் தாக்கியுள்ளன.
அத்துடன் 5ஆவது இடம் கொலம்பியாவுக்கும் 6ஆவது இடம் கொங்கோவின் சகே நகருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் மற்றும் கெமரூன் ஆகிய நாடுகளும் அதிகளவில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள் என பட்டியலை வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.