அமெரிக்காவில் ஒருவர் கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலாஸ்காவில் மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு பைசர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு 10 நிமிடங்கள் ஆன நிலையில், அவருக்கு anaphylactic reaction என்று அழைக்கப்படும் ஒவ்வாமையால் ஏற்படும் பிரச்சினை ஏற்பட்டு, அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே ஒவ்வாமைப் பிரச்சினை உடையவர்களுக்குத்தான் இந்த anaphylactic reaction ஏற்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு இதுவரை எந்த ஒவ்வாமை பிரச்சினையும் கிடையாது என்பதால், இந்த விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
இப்படி ஒவ்வாமை பிரச்சினை இல்லாதவர்கள் தடுப்பூசியால் பாதிக்கப்படுவது அமெரிக்காவிலேயே இதுதான் முதல் முறையாகும்.
இந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை, பிரித்தானியாவில் இரண்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏற்பட்ட அதே போன்றதொன்று என நம்பப்படுகிறது. இதில் நல்ல விடயம் என்னவென்றால், பிரித்தானியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இருவரும் நலமடைந்து வீடு திரும்பிவிட்டார்கள் என்பதுதான்.
இதற்கிடையில், நாடே இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டுவிட்டதால் பரபரப்படைந்துகொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணோ, தன்னால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதே என வருத்தத்தில் இருக்கிறாராம்.
![](https://www.theevakam.com/wp-content/uploads/2020/12/I-4.jpg)
![](https://www.theevakam.com/wp-content/uploads/2020/12/H-6.jpg)