அவுஸ்திரேலியாவில் பயங்கர கடல் நுரையில் மூழ்கி மாயமான செல்ல பிராணியை பெண் ஒருவர் துணிச்சலாக சென்ற மீட்ட வீடியோ இணையத்தில் வைரலகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் Byron விரிகுடாவில் உள்ள மெயின் கடல் கரையோரம் முழுவதும் பழுப்பு நிற நுரையால் சூழப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தி சேகரிக்க 7NEWS Queensland தொலைக்காட்சி வானிலை வானிலை ஆய்வாளர் Paul Blurt,Gold Coast’s Snapper Rocks கடற்கரைக்கு சென்றுள்ளார்.
Paul Blurt நேரலையை தொடங்கவிருந்த நிலையில், பெண் ஒருவர் பயங்கர கடல் நுரையில் மூழ்கி மாயமான தனது நாயை கண்டுபிடிக்க துணிச்சலாக செல்வதை கண்டுள்ளார்.
அப்பெண், அழுத படி Hazel..Hazel என தனது செல்ல பிராணியின் பெயரை அழைத்த படி பயங்கர கடல் நுரைக்குள் செல்கிறார்.
அப்பெண்ணுக்கு உதவியாக மற்றொரு நபரும் நாயை தேடியுள்ளார்.
இறுதியில் அதிர்ஷ்டவசமாக நாய் நுரைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. நாயை கட்டியணைத்த உரிமையாளர் பெண், அதை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தார்.பெண் பயங்கரமான நுரைக்குள் துணிச்சலாக சென்ற நாயை மீட்ட காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.