சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி நாட்டை சேர்ந்த 25 வயதான வாலிபர் ஒருவர் தனது சகோதரருடன் சுவிஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
நேற்று முன் தினம் பனிச்சறுக்கு விளையாடுவதற்காக தனது சகோதரருடன் வாட் மாகாணத்தில் உள்ள Vaudlander பகுதிக்கு சென்றுள்ளார்.
பின்னர், உபகரணங்களை அணிந்துக்கொண்ட அவர் சரிவான பகுதியில் உற்சாகமாக பனிச்சறுக்கில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாலிபர் சுமார் 150 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த சகோதரர் உடனடியாக மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்.
ராகா ஹெலிகொப்டரில் வந்த மீட்புக் குழுவினர் சில மணி நேரமாக தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர்.
பின்னர், மாலை 4.30 மணியளவில் வாலிபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை மீட்ட மீட்புக் குழுவினர் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் சகோதரருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
பனிச்சறுக்கு உபகரணம் எதனால் கட்டுப்பாட்டை இழந்து உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.