நடிகை விந்தியா குறுகிய காலத்தில் அதிமுகவில் பெரும் இடத்தைப் பிடித்தவர். ஜெ. அம்மா இறந்த பின் மிகவும் மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார்.
அரசியலில் இருந்து விலகும் எண்ணத்தில் இருந்ததாகவும், திமுகவில் சேரப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்தது.
முதல்வர் பன்னீர் அழைத்து ஆறுதல் கூறியதாகவும் செய்திகள் வந்தது. தமிழ் நாட்டு மக்கள் முதல்வர் பன்னீரை மலை போல நம்பினார்கள்.
முதல்வரை ஒரு ஹீரோ ரேஞ்சிற்கு கொண்டாடினார்கள். கட்சியின் பெரும்பாலோர் முதல்வர் தான் ஆண்மகன், சிங்கம் என்றெல்லாம் போற்றினார்கள்.
ஊடகங்கள் முதல்வரின் ஆளுமையை போற்றியது. லைவ்டே மின் இதழும் முதல்வரின் செயல் பாடுகளை பாராட்டி எழுதியது.
ஆனால் நேற்று நடந்த பொதுக்குழுவில் பன்னீரும் சசியை சின்னம்மா என்று அளித்த போது மக்கள் நொறுங்கிப் போனார்கள்.
இந்த நிலையில் நடிகை விந்தியா மறைந்த அம்மா சமாதிக்கு போனார் என்றும் கதறி அழுதார் என்றும் சமூகவலைத்தளங்களில் தீயாக செய்தி பரவியது.
முதல்வர் பன்னீரின் உல்ட்டா விஷயம் விந்தியா கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லையாம். பொதுக்குழு கூடி சசியை பொதுச்செயலாளர் ஆகியது வெட்கம் மிகுந்த செயல் யாருக்கும் வெட்கமே இல்லை.
அம்மா இருந்த இடத்தில சசி என்பதை விந்தியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்கிறார்கள்.