சிம்புவை பிரிந்த பிறகு பிரபுதேவாவை நயன்தாரா காதலித்தார். அவரை திருமணம் செய்ய மதம் மாறியதுடன் அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார்.
இருந்தும் அவர்களின் காதல் முறிந்தது. அதன் பிறகு நயன்தாரா படங்களில் நடிக்க வந்துவிட்டார். பிரபுதேவா மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். 2017ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று தெரிகிறது.
இந்நிலையில், நயன்தாரா சென்னை கடற்கரையோரம் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற இடத்தில் பிரபுதேவாவை தற்செயலாக சந்தித்தாராம்.
இருவரும் சிறிது நேரம் மனம்விட்டு பேசினார்கள் என்ற செய்தி பரவியது.
ஆனால், தற்போது நயன்தாராவும், பிரபுதேவாவும் சந்தித்து பேசியதாக வெளியாகிய தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.