தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5, நள்ளிரவு 11 மணியளவில் காலமானார் என்ற செய்தியை கேட்டது மறக்கமுடியாத ஒன்று.
திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை நேரில் வந்து செலுத்தினர். ஆனால் கமல் ஹாசன் தனது அனுதாபங்களை ட்விட்டரில் பகிர்ந்தார்.
தற்போது ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருக்கிறது என கட்சியினரும், பொதுமக்களும் கூறிவருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரனைக்கு வந்தபோது நீதிபதி தனக்கே இதில் சந்தேகம் இருக்கிறது.
மத்திய அரசு, மற்றும் மருத்துவர்கள் இறப்பு குறித்த உண்மையை வெளியிட வேண்டும். வேண்டுமானால் ஜெயலலிதா உடலை வெளியே எடுத்து பரிசோதனை செய்ய உத்தரவிடப்படும் என அவர் கூறினார்.
சசிகலாவிற்கு எதிராக பல இடங்களில் சிலர் போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துவருகிறார்கள். இது ஒருபுறமிருக்க கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தனது ட்விட்டரில் தனது பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து வந்த இந்த பதிவை பார்த்தவர்கள் சசிகலாவை பற்றி தான் கமல் இப்படி மறைமுகமாக தாக்கி பேசுகிறாரோ என பேசிவருகிறார்கள். மேலும் அமெரிக்க தேர்தலின் போது ஒரு பதிவை போட்டு கூடவே தமிழக அரசியலை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
ஜெ உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது தனது பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு விதித்தார்.
தற்போது அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகள் பலரையும் அதிரவைத்துள்ளது.