திருமணம் செய்ய மறுத்த காதலனை தக்க பாடம் புகட்டி காதலி செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்தார்.
இந்த நிலையில், ஸ்ரீராமின் தாயாருக்கு உ டல்நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்து கொள்ள தன் காதலியை வீட்டிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார்.
இரண்டு மாதங்கள் ஸ்ரீராம் வீட்டில்தான் அந்த இளம் பெண்ணும் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நாம் தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார்.
அதன் பிறகு 60 நாட்களில் காதலி வெறுத்துப்போனதால் இளைஞர் தனது சுயரூபத்தினை காட்ட ஆரம்பித்துள்ளார்.
பின்பு அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளைஞனை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அவரோ மறுத்துவிட்ட நிலையில், வேதனையடைந்த அப்பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து ஸ்ரீராம் மீது வன்கொடுமை மற்றும் நம்பிக்கை மோசடி என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.