அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 36 ரன்களுக்கு சுருண்டுள்ளது.
இந்தியா – அவுஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் மோசமாக விளையாடினார்கள்.
பிரித்வி ஷா, பும்ரா, புஜாரா, மயான்க், ரஹானே, கோஹ்லி, சஹா, அஸ்வின், விஹாரி ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டது.
டெஸ்ட் போட்டிகளில், இதுவே இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
இதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் இலக்க்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.