நாம் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்கள் வீட்டிற்கு தீயசக்திகளை அழைத்து வருவதோடு உங்கள் ஆயுளையும் குறைக்கும்.
அந்தவகையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் பொருட்கள் குறித்து காண்போம்.
ஓடாத அல்லது உடைந்த கடிகாரம்
உங்கள் வீட்டில் ஒருபோதும் உடைந்த அல்லது ஓடாத கடிகாரத்தை வைக்கக்கூடாது. ஓடாத கடிகாரம் கெட்ட சகுனமாகும். உங்கள் கடிகாரம் உடைந்த அல்லது நின்று போன நேரம் உங்களுக்கு தீமைகள் ஏற்படபோவதற்கான அறிகுறி ஆகும்.
கள்ளிச்செடி
முட்கள் நிறைந்த கள்ளி மற்றும் அதுபோன்ற செடிகள் உங்கள் வீட்டில் பிரச்சினைகள் மற்றும் உறவுகளுக்கிடையே குழப்பங்களை உண்டாக்கக்கூடும்.
கலைந்த படுக்கை
பழங்காலம் முதலே நிலவும் மூடநம்பிக்கைகளில் ஒன்று கலைந்த படுக்கை உங்களுக்கு தூக்கமில்லாத இரவுகளை வழங்கக்கூடும். எனவே எந்த குறுக்கீடுகள் ஏற்பட்டாலும் காலை எழுந்தவுடன் படுக்கை மற்றும் தலையணையை சரிசெய்து ஒழுங்காக வைக்கவும்.
வாடிய செடிகள்
உங்கள் வீட்டில் இருக்கும் செடிகள் வாடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்குள் இறந்த பொருட்களை வைத்திருப்பது தீயசக்திகளை நீங்களே அழைப்பது போலாகும்.
ஆடும் நாற்காலி
பண்டைய கலாச்சாரங்களின் படி இப்படி காலியான ஆடும் நாற்காலியை வீட்டில் வைத்திருப்பது தீயசக்திகளை நீங்களே உங்கள் வீட்டுக்கு அழைப்பது போன்றதாகும். காற்று இல்லாதபோது அந்த நாற்காலி தானாக நகர்ந்தால் உங்கள் வீட்டிற்குள் தீயசக்தி ஏற்கனவே புகுந்து விட்டது என்று அர்த்தம்.