தமிழர்சுக்கட்சி மாவை அணி சுமந்திரன் அணிகளுக்கிடையிலான பலப்பரீட்சையில் மாறி மாறி இரு அணிகளும் இலக்குகளை சரித்து வருகின்றன.
சுமந்திரன் அணியில் இருந்து கொண்டு கட்சி தலைவர் மாவைக்கு தேர்தல் பிரசாரம் செய்ததால், ஆர்னோல்டின் மேய்ர் பதவியை தக்க வைக்க , கடந்த முறை செய்த டீலிங்கை செய்வதற்கு சுமந்துரன் மறுத்து அதன் மூலம் ஆர்னோல்டின் பதவி விலக வைத்திருந்தார்.
அதற்கு பதிலடியாக சம்பந்தர் கேட்டும் தமிழரசுக்கட்சி கொரோடா எனும் பதவியை விட்டு விலக மாட்டேன் அடம்பிடித்துக்கொண்டிருந்த சிரிதரன் அவர்களுக்கு கட்சிக்குள் கடும் அழுத்தத்தை கொடுத்த மாவை எனும் ஆளுமை, சிரிதரனை அந்த பதவியில் இருந்து விலக பண்ணியிருக்கிறார்.
மாவை அணியின் அடுத்த இலக்கு பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்துரனை தூக்குவது தான் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் முன்னர் மாவை அணியில் இருந்துவிட்டு இந்த வருடம் சுமந்திரன் அணி பக்கம் சாய்ந்த சிறிதரனிற்கு அழுத்தம் வழங்கி பதவி விலக பண்ணியதால் கடும் கோபத்தில் சுமந்திரன் அணி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.