கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிரித்தானியாவில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸின் தற்போதைய அலை மிக வேகமாகப் பரவிவருவது குறித்த விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலுக்கமைய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இங்கிலாந்திற்கான புதிய கட்டுப்பாடுகளை டவுனிங் ஸ்ட்ரீற் மாநாட்டில் அறிவித்தார்.
இதன்படி, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் லண்டன், கென்ற், எசெக்ஸ் மற்றும் பெட்ஃபோர்ட்ஷைர் (Bedfordshire) உள்ளிட்ட பகுதிகளில் புதிய நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்த நான்கு அடுக்கு கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இதேவேளை, இங்கிலாந்து, ஸ்கொற்லாந்து மற்றும் வேல்ஸில் ஏனைய இடங்களில், பொதுவான விதிகள் கிறிஸ்மஸ் தினம் வரை விதிக்கபடுகின்றன.
அத்துடன், பண்டிகைக் காலங்களில் இங்கிலாந்தின் பிற பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கான தடையும் விதிக்கப்படுகிறது.