அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும்.
ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
* மார்கழி தேய்பிறை அஷ்டமி – சங்கராஷ்டமி
* தை தேய்பிறை அஷ்டமி – தேவ தேவாஷ்டமி
* மாசி தேய்பிறை அஷ்டமி – மகேஸ்வராஷ்டமி
* பங்குனி தேய்பிறை அஷ்டமி – திரியம் பகாஷ்டமி
* சித்திரை தேய்பிறை அஷ்டமி – ஸ்நாதனாஷ்டமி
* வைகாசி தேய்பிறை அஷ்டமி – சதாசிவாஷ்டமி
* ஆனி தேய்பிறை அஷ்டமி – பகவதாஷ்டமி
* ஆடி தேய்பிறை அஷ்டமி – நீலகண்டாஷ்டமி
* ஆவணி தேய்பிறை அஷ்டமி – ஸ்தானுஷ்டாமி
* புரட்டாசி தேய்பிறை அஷ்டமி – ஜம்புகாஷ்டமி
* ஐப்பசி தேய்பிறை அஷ்டமி – ஈசான சிவாஷ்டமி
* கார்த்திகை தேய்பிறை அஷ்டமி – ருத்ராஷ்டமி
அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும். அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றெல்லாம் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வரலாம்.