சனிக்கிழமை வலென்சியாவுக்கு எதிரான போட்டியில், பார்சிலோனாவுக்காக கோல் அடித்ததன் மூலம் லியோனல் மெஸ்ஸி, பிரேசில் ஜாம்பவான் பீலே ஒரே கிளப்பிற்காக 643 கோல்களை அடித்து படைத்திருந்த சாதனையை நிகர் செய்துள்ளார்.
33 வயதான அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸி, ஆட்டத்தின் முதல் பாதிக்கு சற்று முன்னதாக டைவிங் ஹெட்டர் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
மெஸ்ஸி 2005-ஆம் ஆண்டில் அல்பாசெட்டிற்கு எதிராக பார்சிலோனாவுக்காக தனது முதல் கோலை அடித்தார்.
1956 மற்றும் 1974-க்கு இடையில் பிரேசில் அணியின் சாண்டோஸுக்காக பீலே, தாம் விளையாடிய 19 தொடர்களில் மொத்தம் 643 கோல்களை அடித்தார்.
துரதிர்ஷ்டவசமாக, இந்தப் போட்டியில் பார்சிலோனா அதன் எதிரிகளை வீழ்த்தத் தவறியதால் மெஸ்ஸி இதனைக் கொண்டாடவில்லை.
இந்த போட்டி டிரா ஆனதன் விளைவாக, அட்லெடிகோ மாட்ரிட்டை விட 8 புள்ளிகள் பின்தங்கிய நிலையில், 26 முறை சாம்பியனான பார்சிலோனா லா லிகாவில் 5வது இடத்தைப் பிடித்தது.
இருப்பினும், மெஸ்ஸியை பாராட்டும் வகையில். FC Barcelona அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டு பெருமை பகிர்ந்துகொண்டது.
மேலும், இன்ஸ்டாகிராமில் பீலேவிடமிருந்து ஒரு அருமையான வாழ்த்து குறிப்பை மெஸ்ஸி பெற்றுள்ளார். அந்தப் பதிவில் “உங்கள் இதயம் அன்பால் நிரம்பி வழிகிறது, உங்கள் பாதையை மாற்றுவது கடினம்.
உங்களைப் போலவே, ஒவ்வொரு நாளும் ஒரே சட்டை அணிவதை விரும்புவது என்னவென்று எனக்குத் தெரியும். உங்களைப் போலவே, நாங்கள் வீட்டில் உணரும் இடத்தை விட சிறந்தது எதுவுமில்லை என்று எனக்குத் தெரியும்.
உங்கள் வரலாற்று சாதனைக்கு வாழ்த்துக்கள், லியோனல். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, பார்சிலோனாவில் உங்கள் அழகான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
நம்மைப் போன்ற கதைகள், ஒரே கிளப்பை இவ்வளவு காலமாக நேசிப்பது, துரதிர்ஷ்டவசமாக கால்பந்தில் மிகவும் அரிதாகவே இருக்கும். நான் உன்னை மிகவும் ரசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவருடைய புகைப்படத்தையும், அதை ஒத்த லியோனல் மெஸ்ஸியின் மற்றோரு புகைப்படத்தையும் அவர் பகிந்துள்ளார்.
A post shared by Pelé (@pele)