இந்தியாவின் புது டெல்லி, ராஜஸ்தான், மும்பாய், குஜராத் பகுதிகளில் பரவி வரும் பூஞ்சை நோய் தற்போது தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் பரவி வருவதாக சுவிஸர்லாந்தின் Journal of Fungi சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது என சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Mucormycosis என்ற இந்த பூஞ்சை நோய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கு பரவுகிறது.
சுவாச கோளாறு, பார்வை இழப்பு, மூக்கு மற்றும் தாடை என்பன பலவீனமடைதல், கரைந்து போதல் மாத்திரமின்றி முகம் விகாரம் அடைவது போன்றன இந்த நோயின் பிரதான பாதிப்புகள் .
கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு என கூறப்படும் இந்த பூஞ்சை நோய் அபிவிருத்தியடைந்த நாடுகளில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பரவியது. எனினும் 851 பேர் மாத்திரமே இந்த நோயினால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது 80 வீதத்திற்கும் மேல் இந்தியாவில் பரவி வருகிறது என அந்த சஞ்சிகை எச்சரித்துள்ளது. இந்த பூஞ்சை நோய் காரணமாக மும்பாயில் 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் பரவி வரும் இந்த நோய் தற்போது இலங்கைக்கு அருகில் வந்திருப்பதாகவும் சிங்கள இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.