சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பில் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், சித்ராவுக்கு கடன் பிரச்சனை இருந்திருக்கலாம், அதனால் மன உளைச்சலுக்கு ஆளானாரா? யாராவது மிரட்டினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.
மேலும் சித்ரா தற்கொலை தொடர்பாக தங்களிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதாகவும் சித்ராவின் குடும்பத்தார் மற்றும் சின்னத்திரை வட்டாரங்களிலும் விசாரணை நடத்தவேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், குடும்பத்துக்காக உழைத்த என்னுடைய கல்யாண செலவிற்கு பணம் இல்லை என்று அம்மா கூறுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றும், அம்மா, அப்பாவின் 60-வது கல்யாணத்தை என் செலவில் சிறப்பாக நடத்தினேன் என்றும் வருத்தத்துடன் சித்ரா தெரிவித்ததாகவும்,
திருமண செலவு முழுவதும் மணமகன் வீட்டு சார்பாக ஏற்றுக் கொள்கிறேன் என சித்ராவுக்கு ஆறுதல் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வீட்டில் நான் வந்து வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன் என சித்ரா கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.