நவீன காலத்தில் காய்கறிகளை சமைக்காமல் நேரடியாக உண்பது டயட் முறையில் ஒன்றாக கடைபிடிப்பது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, எண்ணெயில் சமைக்கும் உணவுகள் ஆபத்தானதாக பார்க்கப்பட்டு, நேரடியாக உணவுகள் எடுத்துக் கொள்ளும் பொழுது முழுமையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன என நம்பப்படுகிறது.
ஆனால், ஆயுர்வேத மருத்துவர்கள் இதனை முழுமையாக புறக்கணிக்கிறார்கள்.
பழங்கள், கடலைகள் போன்றவற்றினை நாம் சமைக்காமல் உண்ணலாம். ஆனால், காய்கறிகளை சமைக்காமல் உண்ணக்கூடாது என்கிறார்கள். பாரம்பரியமான ஆயுர்வேத மருத்துவமானது சமைக்கப்பட்டு உண்ணப்படும் உணவுகளால் இரண்டு வகையான பலன்கள் இருப்பதாக கூறுகிறது.
ஒன்றாவது, சமைக்கப்பட்டு உண்ணப்படும் உணவுகளானது இரத்த ஓட்டத்தினை அதிகரிப்பதற்கும் செரிமான அமைப்பு சரியாக செயல்படுவதற்கும் உதவிக்கரமாக இருக்கின்றன. இரண்டாவது, சமைக்கப்படும் உணவுகளானது எளிதாக செரிமானம் ஆகி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குகிறது.
முட்டையில் இயற்கையாகவே இருக்கும் சல்மோனெல்லா பாக்டீர்யாவானது பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவது மட்டுமின்றி உயிருக்கே ஆபத்தை உருவாக்கக் கூடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எனவே, முட்டையை குறைந்தப்பட்சம் அவித்த பிறகாவது சாப்பிட்டு பழக வேண்டும். நாம் எடையை குறைக்கிறோம் எனும் பெயரில் டயட் முறையில் அதிக உணவுகளை புறக்கணிப்பது, முறையாக சமைக்காத உணவுகளை உண்பது ஆகியவை நமக்கு தேவையான சராசரியான ஊட்டச்சத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றன.
தேவைக்கு அதிகமான கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்து, கலோரி கிடைப்பதில் குறை வைத்து விடாமல் இருக்க வேண்டும்.
நீங்கள் முழுமையாக சமைக்காத உணவுகளை உண்பதனை நிறுத்துங்கள் என்று பரிந்துரைக்கவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இதனை மேற்கொள்ளுங்கள் மிக முக்கியமாக இப்பொழுதிருக்கும் இந்த குளிர் காலங்களில் செரிமான தன்மை குறைந்திருக்கும்.
இந்த நிலையில், நாம் சமைக்காத உணவுகளை எடுத்துக் கொண்டால், அது இன்னமும் செரிமான வேகத்தினை குறைத்து உடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
மேலும், மழைக்காலங்களில் காய்கறிகளில் அதிகப்படியான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும். இதனை கொதிக்கும் நீரில் சமைக்கும் பொழுது தான் அவற்றினை அழிக்க முடியும், நாம் நேரடியாக காய்கறிகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அவை நம் உடலுக்குள் சென்றுவிட கூடிய அபாயம் இருக்கிறது.