கடந்த மூன்று நாட்களில் (17, 18, 19) ஆகிய தினங்களில் மேல் மாகாணங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல தயாரானவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.
கடந்த மூன்று தினங்களில் மேல் மாகாணத்திலிருந்து செல்ல ஆயத்தமான சுமார் 1,300 க்கும் மேற்பட்டோர் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்,
அவர்களில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் வாகனங்களில் பயணிக்கும் போது நிறுத்தப்பட்டு ஆன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறினார்.
இந்த நாட்களில், மேல் மாகாணத்திற்கு வெளியே பயணிக்கும் வாகனங்களில் பயணிப்பவர்கள் அனைவரும் தொடர்ந்து ஆன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இதற்கு பொதுமக்கள் உதவி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கொரோனா பரவாமல் தடுக்க இந்த விடயங்கள் செய்யப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.