நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 800,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் இவற்றினை முடிக்க குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, வழக்குகளை விரைவுபடுத்துவதற்காக நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்னே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைப்பதற்காக 8000 கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட உள்ளதாகவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்பிரகாரம் முதலில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை ஒரு வருட காலத்திற்குள் புனர்வாழ்வளிப்பதற்கும் நீதி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
குறிப்பாக தற்போது போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் விசாரணையின் இறுதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர் என்றும் நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.