Loading...
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று சுமார் 120 பேரின் பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் எவருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
Loading...
மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன்
தொடர்புபட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 100 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை. அத்துடன், வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளில் இருந்து அனுப்பபட்ட சுமார் 20 பேரின் மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கும் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Loading...