தனிமைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம் மதகுரு ஒருவரின் வீட்டில் உயிரிழந்த பெண்ணின் சடலம் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டமை குறித்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பேருவளை, சைனா டவுன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி வீட்டின் உரிமையாளர், பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்று, தனது வீட்டில் நிகழ்வொன்றை நடத்த அனுமதி கோரியுள்ளார்.
பின்னர், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த வீட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற சுகாதார அதிகாரிகள் வீட்டிலிருந்தவர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் 4 பேருக்கு தொற்று உறுதியானது.
இதேவேளை, இந்த வீட்டில் 78 வயதான பெண்ணொருவர் உயிரிழந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. மாலை 4 மணிக்கு உயிரிழந்தவரின் உடல், இரகசியமாக இரவு 8 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் புதைக்கப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.