கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளில் 21 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து சுகாதார சேவை ஊழியர்களும் பண்டிகை காலத்தை குறித்து சிந்திக்காமல் தொற்று நோய்க்கு எதிராக கடுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்தியர் பாலித்த கருனாபேம தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.
நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. மேல் மாகாணத்தில் இருந்து முடிந்தளவு வெளியேறுவதனை தவிர்க்க வேண்டும்.
அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே நோயை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.