தாம் இறந்த பிறகு உடலையும் தமது மொத்த சொத்துக்களையும் இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா முன்வைத்துள்ளார்.
இந்துத்துவத்தை காக்க தாம் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக கூறும் நித்தியானந்தா, தமது மரணத்திற்கு பின்னர் உடலை பெங்களூருவில் அமைந்துள்ள ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் எனவும்,
சொத்துக்கள் முழுவதும் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தமது புதிய காணொளியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான சில அமைப்புகளிடம் இருந்து தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் அந்த காணொளியில் நித்தியானந்தா அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும், தம்மை கூட்டமாக சேர்ந்து அடித்துக் கொல்லவும் திட்டமிட்டதும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கைலாசா என்ற தமது நாட்டுக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து தனி விமான சேவை இருப்பதாக அறிவித்திருந்தார்.
மேலும், கைலாசாவில் குடியேறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு விசா வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, பலாத்காரம், சிறார்களை கடத்தி தமது ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாக தங்க வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி குஜராத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருந்து இளம் பெண்களை கடத்திச் சென்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில் நேபாளம் வழியாக 2019-ல் நித்தியானந்தா ஈக்வடார் நாட்டுக்கு தப்பினார்.
இதன் பின்னரே தீவு ஒன்றை வாங்கி அதை கைலாசா என்ற புதிய நாடாக அறிவித்தார்.