தமிழகத்தில் குடிகார கணவனால், மனைவி பரிதாபமாக உயிரிழந்ததால், 2 குழந்தைகள் அனாதையாக நிற்கின்றன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஹரி(40). இவருக்கு கோமதி(35) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வரும் ஹரி, ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. தினமும் குடிப்பது, கோமதி மீது சந்தேகப்படுவது என்று அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கோமதிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கார்ப்பரேஷனில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை தற்காலிகமாக கிடைத்துள்ளது.
ஏற்கனவே ஹரியை சந்தேகப்பேய் ஆட்டிப்படைக்க, கோமதி வேலைக்கு போகவும் அது இன்னும் அதிகமாகிவிட்டது. அதுமுதல் விடாமல் சண்டை சச்சரவாகவே வீடு இருந்திருக்கிறது.
கோமதியை போதையில் கண்மூடித்தனமாக அடிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் விருகம்பாக்கத்தில் உள்ள தன் அம்மாவுக்கு போன் செய்து கோமதி அழுதுள்ளார்.
அம்மாவும் நீலாங்கரைக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவைத்து விட்டு சென்றபடி இருந்துள்ளார். சம்பவத்தன்றும் அப்படித்தான் சமாதானப்படுத்த அம்மா சென்றபோது, பிள்ளைகள் வெளியே விளையாடி கொண்டிருக்க, தம்பதி இருவரும் வீட்டிற்குள் சண்டை போட்டு கொண்டிருந்திருக்கிறார்கள்.
இதை தட்டிக் கேட்டபோது, மாமியாரை வீட்டை விட்டு வெளியே போகும்படி ஹரி கூற, இதனால் கோமதியின் அம்மா வெளியில் வந்து நின்றுள்ளார்.
ஆனால், அவர் விருகம்பாக்கத்துக்கு சென்றுவிட்டதாக நினைத்து, ஹரி கோமதியை சரமாரியாக தாக்கி உள்ளார். திடீரென அலறல் கேட்கவும் வெளியே நின்று கொண்டிருந்த அம்மா, பதறியடித்துக் கொண்டு உள்ளே போனால், தரையில் கோமதியை படுக்க வைத்து அவரது கழுத்தை கரகரவென ஹரி அறுத்து கொண்டிருந்துள்ளார்.
இதைக் கண்டி அலறி துடித்த தாய், மகளை அவரிடம் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து இது குறித்து பொலிசாருக்கு தெரியவர, பொலிசா ஹரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இப்போது இந்த தம்பதியின் இரண்டு குழந்தைகளும் தாய் மற்றும் தந்தை இல்லாமல் அனாதையாக தவித்து வருகின்றனர்.