Loading...
நுவரெலியா, சிவனொளிபாதமலை மற்றும் கதிர்காமம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு பொது சுகாதார அதிகாரிகளின் சான்றிதழ்கள் அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பொது சுகாதார அதிகாரிகளின் சம்மேளன செயலாளர் மகேஷ் பாலசூரிய இதனை தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நுவரெலியா சிவனொளிபாதமலை மற்றும் கதிர்காமம் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு பலரும் திட்டமிட்டுள்ளார்கள்.
Loading...
இந்த நிலையில் குறித்த இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அங்கு செல்வோர் பொது சுகாதார அதிகாரிகளின் கொரோனா வைரஸ் தொடர்பான சான்றிதழ்களை எடுத்துச்செல்வது அவசியம் என பாலசூரிய குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தத் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Loading...