தமிழகத்தில் 17 வயது மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அதற்கு காரணமான கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் தங்கபாண்டி. கட்டிட தொழிலாளியான இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது.
இந்த நிலையில் தங்கப்பாண்டி திருமணமானதை மறைத்து பக்கத்து ஊரைச் சேர்ந்த +2 மாணவியைக் காதலிப்பதாக நாடகமாடி வந்துள்ளார். அந்த மாணவிக்கு வயது 17.
தங்க பாண்டி குறிப்பிட்ட மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
இதன் காரணமாகச் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியின் உடலில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர் கர்ப்பம் குறித்து விசாரித்த போது நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் அவர் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து பொலிசார் தங்கபாண்டியை கைது செய்துள்ளனர்.