கிளிநொச்சி இரணைதீவு மக்களில் காணி ஆவணங்களை தொலைத்த மேலும் 11 பேருக்கான காணி ஆவணங்களை வழங்க பூநகரி பிரதேச செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கான காணி கச்சேரி இன்று இடம்பெற்றுள்ளதாக பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் இரணைதீவிற்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் உள்ள மக்களில் காணி ஆவணங்களை தொலைத்தவர்களில. 11 பேருக்கான காணி ஆவணங்களை வழங்குவதற்கான காணி கச்சேரியும் இன்று இடம்பெற்றது. அவ்வாறு காணி ஆவணங்களை தொலைத்த மேலும் 19 பேருக்கு கடந்த வருடம் காணி கச்சேரி அமைக்கப்பட்டு காணி ஆவணம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அதேவேளை 11பேருக்கான கூரைவிரிப்புக்களும், 15 பேருக்கு தற்காலிக கொட்டகை
அமைப்பதற்கு தலா பத்தாயிரம் ரூபா பணமும் இன்று வழங்கி வைக்கப்பட்டதுடன்,
புரவி புயலினால் பாதிக்கப்பட்டு நிவாரண பொதிகள் கிடைக்காத மேலும்
சிலருக்கு இன்று நிவாரண பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச
செயலாளர் தெரிவித்தள்ளார்.
இன்று காலை இரணைமாதாநகர் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின்
போக்குவரத்து உதவியுடன் குறிதத் பகுதிக்கு சென்ற பிரதேச செயலாளர்
தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் தங்கியுள்ள மக்களின் தேவைப்பாடுகள்
மற்றம் பாதிப்புக்கள் என்பவற்றுடன் எதிர்கொள்ளம் சவால்கள் தொடர்பிலும்
கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்