Loading...
பாணந்துறையில் பிரபல ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குளானவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளதாக களுத்துறை நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்தள்ளார்.
அதற்கமைய குறித்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுவதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
Loading...
கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் கிரிஉல்ல பிரதேசத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொழிற்சாலை ஊழியர்கள் தங்கியிருந்த இடத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Loading...