நடிகர் ரஜினிகாந்தின் கட்சி அறிவிப்பு விழா நடைபெறும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 3ம் தேதி ஜனவரியில் கட்சித் துவக்கம்,டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், ரா.அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினியின் கட்சி அறிவிப்பு விழா மதுரையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆய்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2005 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தனது கட்சியை மதுரையில் தான் அறிவித்தார். 2018 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை மதுரையில் அறிவித்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.