அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அவர் கூறுகையில், எம்ஜிஆர் என்ன சிறந்த ஆட்சியை தந்தார்? பரப்புரையில் எம்ஜிஆர் குறித்து பேசினால், அதிமுகவின் இரட்டை இலைக்கும் தான் ஓட்டு போடுவார்கள். அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார்.
ரஜினி, கமலை அடிக்கிற அடியில் எந்த நடிகருக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வராது.
நடிப்பது மட்டுமே அரசியலுக்கு வருவதற்கான தகுதி என்பதை இத்தோடு அவர்கள் மறந்துவிடவேண்டும்
நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்துவிடும் என்கிற எண்ணம் மாற வேண்டும்; நல்லகண்ணு தவிர இங்கு யாரும் நல்ல அரசியல்வாதி அல்ல.
எடப்பாடியார் தமிழர்; அவர் ஆட்சி நன்றாக இல்லை என்றால் நாங்கள் வந்து நல்லாட்சி தருகிறோம்; அதற்காக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.