Loading...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆடை (கார்டினலின் அங்கி) யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு, இன்று வழங்கப்பட்டது.
பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்து, இந்த ஆடையை வழங்குவதாக திட்டமிடப்பட்டது. எனினும், அவர் இன்று யாழ்ப்பாணம் வரவில்லை.
Loading...
இதையடுத்து, யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ் ஆயர் இல்லத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
Loading...