Loading...
எம்ஜிஆர் குறித்து கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக செய்தியாளருக்கு பேட்டியளித்த சீமான், பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி என்ன நல்லாட்சி தந்தார்? எனக் கேள்வி எழுப்பினார்.
Loading...
இந்நிலையில், எம்ஜிஆர் மீது சீமான் புழுதிவாரி தூற்ற நினைத்தால் அது அவருக்கு பெருங்கேடாக முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
எம்ஜிஆர்-ன் புகழை யாராலும் அழிக்க முடியாது. மேலும், சீமான் யாருக்கு பி-டீமாக செயல்படுகிறார் என்று தெரியவில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Loading...