புற்றுநோய்களில் பல வகைகள் உண்டு. சிறுநீரக உயிரணுக்களில் உண்டாகும் புற்றுநோய் சிறுநீரக புற்றுநோய்.
தற்போது சிறுநீரக புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியமானது.
சிறுநீரில் ரத்தம்
இது பொதுவான அறிகுறி என்றே சொல்லலாம். இது ஹீமாட்டூரியா என்று சொல்லப்படுகிறது. சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 40 முதல் 50% வரை இந்த அறிகுறி உண்டாவதாக கூறப்படுகின்றது.
இது குறித்த ஆய்வு ஒன்றில் சிறுநீரில் சிறிதளவு ரத்தம் அல்லது இளஞ்சிவப்பு, பழுப்பு அல்லது சிவப்பு வண்ண மாற்றத்தை உண்டாக்கும்.
இதனால் ரத்தத்தின் அளவு சீரற்று இருக்கலாம். ஒவ்வொரு நாளும் இது தொடரக்கூடும். சில நேரங்களில் மிகச்சிறிய அளவு ரத்தம் வரக்கூடும். ஆனால் சிறுநீர் கழிக்கும் போது மட்டுமே இதை கண்டறிய முடியும்.
அதற்காக சிறுநீரில் ரத்தம் வந்தாலே அது சிறுநீரக புற்றுநோய் என்று நினைத்து விட வேண்டாம்.
அது சிறுநீர்ப்பை தொற்று சிறுநீரக கற்கள், சிறுநீரில் வேறு ஏதேனும் குறைபாடு இருந்தாலும் வரக்கூடும். அதனால் அச்சம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
கீழ் முதுகு வலி
முதுகு வலி என்பது நடுத்தர வயதுக்கு பிறகு வரக்கூடிய ஒன்று தான். அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவ்வபோது முதுகுவலி வரக்கூடியது தான். இது தசைக்கூட்டு காயம் அல்லது சிதைவால் உண்டாக கூடியது.
ஆனால் அடி முதுகு வலி தீவிரம் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாகும்.
சிறுநீரக புற்றுநோய் கொண்டிருந்த நோயாளிகளில் 41 சதவீதம் பேர் முதுகுவலியை கொண்டிருந்ததாக கூறியுள்ளார்கள். ஆனால் புற்றுநோய் வந்த பிறகு தான் அதிக முதுகு வலியை அனுபவிக்கிறார்கள்.
இந்த வலியானது மந்தமாக இருக்கும். இது முதுகில் விலா எலும்புகளுக்கு கீழ் ஒரு கூர்மையான வலியை உண்டாக்கும். முதுகுபகுதிக்கும், விலா எலும்புகளின் பின்புறத்தில் கீழும் உள்ள பகுதியில் உண்டாகும் வலியோடு இது பக்கவாட்டிலும் வலியை உண்டாக்கும்.
சிறுநீரக புற்றுநோய் கொண்டிருந்தவர்கள் சிலர் முதுகு பகுதியில் வலி அல்லடு கூர்மையான அழுத்தத்தை கொண்டிருந்ததாக தெரிவித்தார்கள். எப்போதும் இல்லாமல் திடீரென்று முதுகு வலி இருந்தால் மருத்துவரை சந்திக்கும் போது மறக்காமல் குறிப்பிடுங்கள்.
வயிற்றில் கட்டி
அடி வயிற்றை சுற்றி எங்கேனும் ஓரிடத்தில் ஒரு கட்டி, பக்க வாட்டில் அல்லது முதுகில் சிறுகட்டி முளைத்தால் அது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இது சருமத்தின் கீழ் கடினமான, தடிமனான, வீக்கம் போன்றும் உணரலாம். சிறுநீரக புற்றுநோயாளிகள் 45 % பேர் வயிற்றில் கட்டியை கொண்டிருந்திருந்ததாக கூறியுள்ளார்கள்.
சிறுநீரக கட்டிகளை உணர்வது கடினமாக இருக்கும். சிறுநீரகங்கள் அடி வயிற்றீல் ஆழமாக இருப்பதால் கட்டி வளரும் போது பார்ப்பதையோ உணரவோ கூட சமயத்தில் முடிவதில்லை. ஒரு வேளை நீங்கள் கட்டியை உனர்ந்தால் மருத்துவர் அல்ட்ராசவுண்ட், சிடிஸ்கேன் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவார்.
இது கட்டியின் காரணத்தை தீர்மானிக்க உதவும். பெரும்பாலான நேரங்களில் இதை உறுதி செய்ய பயாப்ஸி தேவைப்படக்கூடும். அதே நேரம் அடி வயிற்றில் வரக்கூடிய கட்டிகள் எல்லாம் புற்றுநோய் கட்டிகள் அல்ல. அடிவயிற்றை சுற்றியுள்ள கட்டி குறித்து சந்தேகம் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
ரத்த சோகை மற்றும் சோர்வு
ரத்த சோகை பொதுவான அறிகுறிகளில் ஒன்று தான். புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தும் போது சுமார் 70% முதல் 100% பேர் சோர்வை கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் சோர்வை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக கூறுகிறார்கள்.
பொதுவாக தூக்கமின்மையால் வரக்கூடிய சோர்வை காட்டிலும் புற்றுநோயால் உண்டாகும் சோர்வு வேறுமாதிரியானது. இது அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத அளவுக்கு சோர்வை உண்டாக்க கூடும். நாளாக நாளாக இது தீவிரமடைய கூடும்.
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 21% ரத்த சோகை அல்லது குறைந்த ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை கொண்டிருந்தார்கள். பொதுவாக சிறுநீரகங்கள் உடல் இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்க சமிக்ஞை செய்கிறது. புற்றுநோய் இந்த பணியை தலையிட செய்யும்.
ரத்த சோகை மோசமடைந்து சோர்வு, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், சருமத்தில் வெளிர் நிறத்தை உண்டாக்கும். வழக்கத்தை காட்டிலும் சோர்வாக அன்றாட பணி செய்வதே சிரமமாக இருக்கும் போது மருத்துவரை அணுகி காரணம் அறிவது நல்லது.
எதிர்பாராத எடை இழப்பு
சிறுநீரக புற்றுநோய் கொண்டிருந்தவர்களில் 28% பேர் உடல் எடையை அதிகம் குறைந்திருந்ததாக கூறியுள்ளார்கள். அடி வயிற்றின் கீழ் புறத்தில் இருக்கும் கட்டிகள் வேகமாக மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடும்.
பொதுவாக உடல் எடை குறைப்பில் ஈடுபடாவிட்டாலும் கூட உடல் எடை குறையக்கூடும். பசியின்மை உண்டாக கூடும். சாப்பிடுவதில் ஆர்வம் இன்மையால் அதிக எடை இழப்பு உண்டாக கூடும்.
காய்ச்சல் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்காது. ஆனால் காய்ச்சல் அடிக்கடி வரும் போது இது சிறுநீரக தொற்று நோயால் வரக்கூடியது என்று நினைக்க வேண்டாம் இது பொதுவாக தொற்று நோயால் உண்டாவதில்லை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட அறிகுறிகள் எல்லாமே சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறி என்று நினைத்து பயந்துவிட வேண்டாம். அதே நேரம் உங்கள் குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு இருந்தால் தவிர்க்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. ஆரம்பத்தில் கண்டறிந்தால் சிகிச்சை தருவதும் எளிதாக இருக்கும்.