யாழ் மாநகரசபை ஆணையாளராக உள்ள கவிஞர் என தன்னைக் கூறி தனக்கு சொந்தமான சமூகவலைத்தளத்திலும் தனக்கு சொந்தமான இணையத்தளத்திலும் கவிஞர்கள் மட்டுமே விளங்கக் கூடியவாறு கவிதைகள் எழுதி ஊடகச்செயற்பாடுகளில் ஈடுபடும் த.ஜெயசீலனும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அவர்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அப்பாவி இளைஞர்கள் பலரை அவர்கள் பக்கம் திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் யாழ் மாநகரசபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானது தொடர்பாக, ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கினார் என குற்றம் சாட்டி, யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில், தனது ஊழியர் ஒருவரை யாழ் மாநகர ஆணையாளர் முறையிட்டு அச்சுறுத்தியிருந்தார். அந்த அச்சுறுத்தலின் போது, பொலிஸ் அதிகாரிக்கு முன் குறித்த ஊழியர் பயங்கரவாதி எனவும் பயங்கரவாத பிரிவினால் இவருக்கு விசாரணை உள்ளது எனவும் பகீரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.இது தொடர்பாக பொலிஸ் விசாரணை அறிக்கையிலும் இவர் பதிவு செய்துள்ளதாக பொலிஸ்தரப்புக்களிலிருந்து தகவல்கள் ஊடகவியலாளர்கள் சிலருக்கு கசிந்திருந்தது. மாநகரசபை ஆணையாருடன் பாலியல்பலவீனம் மற்றும் தவறான நடத்தைப் பிறழ்வுகளைக் கொண்ட பிரதி ஆணையாளரும் யாழ் பொலிஸ் நிலையத்தில் காணப்பட்டதாக ஊடகத்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாநகரசபையின் பிரதிஆணையாளர் சீராளனின் தவறான நடத்தை தொடர்பாக அறிந்தவர்களை சீராளன் பழிவாங்கி வருவதுடன் மாநகரசபை ஆணையாளரையும் தனது வசப்படுத்தி வைத்து பல காரியங்களை அவர் மேற்கொண்டு வருகின்றார். வடக்கு மாகாணசபையின் முக்கிய அலுவலகம் ஒன்றில் இரண்டாம் தர அதிகாரியாக உள்ள இளம் பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டே தனக்கு எதிரானவர்களுக்கு பிரதிஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறித்த ஊழியரையும் சீராளன் தனது தனிப்பட்ட நடவடிக்கைகளை அறிந்துள்ளார் என கருதியே கடும் அச்சுறுத்தல் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த ஊழியரை பழிவாங்கும் வகையில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் மற்றும் மன உழைச்சலை அவருக்கு வழங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறான நிலையில் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் தொடர்பாக ஆராய முற்பட்ட போது அவரது தமிழ்த்தேசியத்துக்கு உரம்சேர்க்கும் கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.