எல்லா காலங்களிலும் பசுமையாக இருக்க கூடிய மரம் என்று மருதம் மரத்தை சொல்வார்கள்.
இலை, பட்டை, பழம், விதை என எல்லாமே பயன் தருபவை. இதன் பட்டையைக் கஷாயம் வைத்து குடித்தால், எந்த நோயுமே பக்கத்தில் வராதுன்னு பெரியவர்கள் பெருமையாக சொல்லுவார்கள்.
இது எண்ணற்ற நோய்களை தீர்க்கும் சக்திப்படைத்தது. குறிப்பாக இது நீரழிவு நோய்களுக்கு பெரிதும் உதவு புரிகின்றது. இதில் செய்யப்படும் கஷாயத்தை தொடர்ந்து 41 நாட்கள் குடித்து வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கும்.
அந்தவைகையில் தற்போது மருதப்பட்டை எப்படி நீரிழிவு நோய்களுக்கு உதவுகின்றது என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
மருதம் மரத்தின் பட்டையுடன் நாவல் மரத்தின் பட்டையும் தலா 10 கிராம் அளவு எடுக்கவும்.
இதில் சிறு சுண்டுவிரல் போன்று ஆலமரத்தின் நுனியை வெட்டி அனைத்தையும் சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது ஒரு டம்ளராக ஆகும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி இலேசாக மத்தில் கடைந்து வடிகட்டவும்.
இதை காலை வெறும் வயிற்றீலும். மாலை நேரத்தில் எதுவும் உண்ணாமல் வயிறு காலியாக இருக்கும் போதும் இதை அரை டம்ளர் வீதம் குடித்துவர வேண்டும்.
பலன் என்ன?
- தொடர்ந்து 41 நாட்கள் வரை இதை குடிக்கலாம். இதை குடிப்பதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்வது அவசியம்.
- இடையில் 20 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் ரத்த சர்க்கரை அளவு பரிசோதிக்கவும். ஏனெனில் இவை நீரிழிவை முழுவதுமாக கட்டுப்படுத்தகூடியவை என்பதால் நீரிழிவு வேகமாக குறைந்துவிடக்கூடும் அபாயம் உண்டு.
குறிப்பு
- நீரிழிவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்கள் மாத்திரைகளோடு மருதம்பட்டை சேர்த்த கஷாயமும் குடிக்கலாம். எப்போதும் போன்று உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டாம்.
- அவ்வபோது ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனையும் அவசியம். அதே போன்று மருத்துவரின் ஆலோசனையோடு இதை மருந்தாக எடுத்துகொண்டால் நீரிழிவு குறைபாட்டில் நிச்சய பலன் உண்டு